செய்தி விளையாட்டு

IPL 2024 – PlayOff சுற்றில் யார் யார் இடையே போட்டி?

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது.

இதன் முடிவில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் (குவாலிபயர் 1) புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2வது இடம் பிடித்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதனை தொடர்ந்து 22ந்தேதி இதே மைதானத்தில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன.

24ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றும் (குவாலிபயர் 2), 26ந்தேதி இறுதிப்போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி