வட அமெரிக்கா

கனடா குடியேற்ற விதிகளில் மாற்றம் ;இரு வாரங்களாக போராட்டட்தில் ஈடுபட்டு வரும் இந்திய மாணவர்கள்

இந்தியர்கள் பலர் படிப்பு, வேலை என பல ரீதிகளுக்காக கனடாவை தேர்ந்தெடுத்து அங்கு குடிப்பெயர்ந்து வருகிறார்கள்.

கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதன் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கனடாவில் உள்ள ஒரு மாகாணம் பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட் . இந்த மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது.

இதன் காரணமாக இந்த மாகாணத்தில் படித்து வரும் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் , இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

Canada Calling: Why are Indian students protesting in Prince Edward Island,  and why it's likely to spread to other parts of Canada | Chandigarh News -  The Indian Express

இதனால் இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இது தற்போதும், இதுவரையும் இல்லாத சூழ்நிலையாக உள்ளது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த போராட்டம் மற்றும் கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல் குறித்து எந்த ஒரு தகவலோ அல்லது அறிவிப்பையோ கனடா தரப்பு கொடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

வெளிநாட்டவர்களின் வருகையை குறைக்கும் விதமாக புதிய விசா விதிமுறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது கனடா. இந்த விதிமுறையானது புதிதாக கனடாவை தேர்ந்தெடுப்பவர்களுக்கு செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, அங்கேயே இருக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது செயல்படுத்தக்கூடாது எனும் நோக்கத்தில் இந்த போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்