இந்தியா

இந்தியாவில் திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடாவை சாப்பிட்ட 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி..!

பெங்களூருவை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடாவை சாப்பிட்டதால், வயிற்றில் ஓட்டை விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சியில் திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடா வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி ருசித்துள்ளனர். அப்போது இவ் 12 வயது சிறுமி தனக்கும் இந்த திரவ நைட்ரஜன் கலந்த பான் பீடா வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் அவருக்கு அந்த பான் பீடாவை வாங்கி கொடுத்தனர்.

இதை அருந்திய சில நாட்களிலேயே அந்த சிறுமிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள நாராயணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

12-Year-Old Girl Gets Hole In Her Stomach After Eating Liquid Nitrogen Paan In Bengaluru - Oneindia News

அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, திரவ நைட்ரஜன் காரணமாக அவரது வயிற்றில் உள்ள திசுக்கள் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. எண்டோஸ்கோபி மூலம் வயிற்றுக்குள் கேமராவை செலுத்தி பார்த்தபோது, சுமார் 20 சதுர சென்டிமீட்டர் அளவிற்கு திசுக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

See also  500 ரூபாய் கள்ள நோட்டில் காந்திக்குப் பதில் ஹிந்தி நடிகர் படம் - இந்தியாவில் அதிர்ச்சி!!

இதனை மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது என்பதால், அந்த பகுதியை வெட்டி எடுப்பது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட திசுக்கள் மொத்தமாக வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த இடத்தில் சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், ஆனால் திரவ நைட்ரஜன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content