ஜெர்மனியில் உதவி பணம் பெறுவதற்காக தொழில் செய்வதை தவிர்க்கும் மக்கள்
ஜெர்மனியில் புதிய சமூக உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் சமூக உதவி பணம் வழங்கப்படுவது அதிகரித்து இருப்பதன் காரணமாக வேலை செய்கின்றவர்களின் எண்ணிக்கையானது குறைவடைந்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியள்ளது.
அதாவது சமூக உதவி பணத்தை பெற்றுக்கொள்கின்றவர்கள் தாம் சாதாரண ஒரு வேலைக்கு செல்லும் பொழுது குறித்த வேலையில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட சமூக உதவி பணத்தொகையானது அதிகமாக கிடைப்பதாக தெரியவந்துள்ளது..
இதன் காரணத்தினால் வேலைகளை ஏற்பதற்கு தயக்கம் அடைவதாக தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் பொழுது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தமாக 23000 பேர் மேலதிகமாக ஜெர்மனியில் வேலை இல்லை என்று தம்மை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் பல லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கு பற்றாகுறையாக இருக்கும் நிலையில் சாதாரணமானவர்கள் சாதாரண வேலைகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுவது இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும் வெளிநாட்டில் இருந்து சாதாரணமாக குடியேறியவர்கள் ஜெர்மனிய மொழியில் சிறந்து விளங்காத காரணத்தினால் இவர்களால் வேலையை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சமூக உதவி தொகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.