இலங்கையில் வாக்குமூலம் பதிவு செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
வாக்குமூலமொன்றை பதிவு செய்யச் செல்லும் போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவரின் கழுத்தை சந்தேக நபர் கடித்ததால் பொலிஸ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் அதிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மொனராகலை பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.
மொனராகலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில் கலவரமாக நடந்து கொண்ட நபரை மொனராகலை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
அவரை அறையில் வைத்து சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





