ஜார்ஜியா’ரஷ்ய பாணி’ மசோதா ; தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த அதிபர்
ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்ட்ட ‘ரஷ்ய பாணி’மசொதா என்று விமர்சிக்கப்படும் சர்ச்சைக்குரிய்ய மசோதாவை அந்த நாட்டு அதிபர் சலோமி ஸூரபிச்விலி தனத வீட்டோ அதிகாரத்தைப் பயன்படத்து ரத்து செய்தார்.
தென் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள முன்னால் சேவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவின் நாடாளுமன்றத்தில் ‘வெளிநாட்டு செல்வாக்குச் சட்ட’மசோநா கடந்த புதன் கிழமை நிறைவேற்றப்ப்டது .
அந்த மசோதாவில் நாட்டில் செயல்படும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் 20 சதவீதக்கிற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்த நிதி பெற்றல் ;வெளிநாட்டு நலனக்காக இயங்கும் அமைப்பு’எனப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அண்டை நாடான ரஷ்யாவைப்போல அரசுக்கு எதிரானகரத்துக்களை நசுக்க முயல்வதாகவும் ஊடக சுதந்திரம் பறிக்கப்படவதாகவும் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கடுமையான சர்ச்சைக்கு இடையிலும் வெளிநாட்டு செல்வாக்கு சோதாவை பிரதமர் இராக்ளி கொபாகிட்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
ஜார்ஜியாவில் வெளிநாட்டு சக்திகள் தலையீட்டை தடுக்கவும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் வெளிப்படையான செயல்பாடுகளை உறுதி செய்யவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறியிருக்கிரார்.
இருந்தாலும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வரும் அதிபர் சலோமி ஸூரபிச்விலி, ஏற்கனவே கூறியிருந்த படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதனை தற்போது ரத்து செய்துள்ளார்.
எனினும் அந்த நடவடிக்கையைப் புறக்கணிக்கத் தேவையான அளவுக்கு பிரதமர் இராக்ளி கோபாகிட்ஸே்க்கு நாடாளுமறத்தில் பலம் இருப்பதாக்க் கூறப்படுகிறது.