ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விஜயம்!
ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் சனிக்கிழமையன்று தென்மேற்கில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரான்சின் எல்லையில் உள்ள சார்லாந்தில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்து கொள்வதை இரத்து செய்துவிட்டு குறித்த பகுதிக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.
மாநிலத் தலைநகரான சார்ப்ரூக்கனில் உதவிக்கான ஆயிரக்கணக்கான கோரிக்கைகள் கிடைக்கப்பெறுவதாகவும், அதிகாரிகள் அவர்களுக்கு பதிலளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சேதத்தின் சரியான அளவு குறித்து உடனடி தகவல் இல்லை. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





