எதிர்பாராத வருமானம் – ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் அடைந்த சாதனை இலாபத்திற்குப் பிறகு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது.
ஊழியர்களுக்கு ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் 5.1 பில்லியன் டொலர்களை தாண்டி சாதனை லாபத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 2023-2024 நிதியாண்டில் 2.67 பில்லியன் சிங்கப்பூர் டொலர் என்ற சாதனை ஆண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 24 சதவீத வளர்ச்சியாகும்.
போட்டி அழுத்தம், அதிகரித்து வரும் செலவுகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற சவால்கள் இருந்தபோதிலும், விமானப் பயணத்திற்கான வலுவான தேவை மற்றும் வலுவான சரக்கு துறை ஆகியவை விமான நிறுவனத்தின் லாபத்திற்கு பங்களித்துள்ளன.
மார்ச் மாத நிலவரப்படி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கோவிட்டிக்கு முந்தைய பயணிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில், எமிரேட்ஸ் ஏர்லைன் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸையும் வழங்கியுள்ளது.
துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் அவர்களது 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது.
நிறுவனத்தின் சாதனை இலாபம் காரணமாக இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டதாக தலைவர் ஷேக் அஹமட் பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்தார்.
ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்த அவர், பெறப்படும் ஒவ்வொரு திர்ஹாமும் ஊழியர்களின் அர்ப்பணிப்பின் பலன் என்று குறிப்பிட்டார்.