உலகம் முழுவதும் திடீரென அதிகரித்த பில்லியனர்கள் – பிரித்தானியாவுக்கு கிடைத்த இடம்
2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக சீனாவும், அங்கு வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 814 ஆகவும் உள்ளது.
அந்த தரவரிசையின்படி, அமெரிக்கா 800 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தெற்காசிய நாடான இந்தியா, தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 271 ஆக உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடுகளில், பிரித்தானியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் நாட்டில் வாழும் பில்லியனர்களின் எண்ணிக்கை 146 ஆகும்.
அந்த தரவரிசையில் ஆஸ்திரேலியா 14வது இடத்தில் உள்ளது. அதன்படி, வரும் 2024ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் 45 பில்லியனர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் 140 பில்லியனர்களும், சுவிட்சர்லாந்தில் 106 பில்லியனர்களும், இத்தாலியில் 69 பில்லியனர்களும் உள்ளனர்.