இலங்கை வந்து 6 மாதத்தில் பல கோடி சம்பாதித்தத சீனர் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சீன மொழிபெயர்ப்பாளராக இலங்கைக்கு வந்து உரிமம் இன்றி இரத்தினக்கல் வியாபாரம் செய்து 06 மாத குறுகிய காலத்தில் சம்பாதித்த 365 மில்லியன் ரூபாவை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
சீனப் பிரஜைக்கு மூன்றரை மில்லியன் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு வருட கடூழிய கடூழியச் சிறைத்தண்டனையும், 15 வருட காலத்திற்கு ஒத்திவைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தை அறியாமை மன்னிக்க முடியாது என்று சுட்டிக்காட்டி, சீன மொழி ஆய்வாளரான வு ஷெனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2018 பெப்ரவரி 28ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் வியாபாரத்தை இலங்கையில் நடத்தியமைக்காக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பிலான நீண்ட விசாரணையின் பின்னர், பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி பின்வருமாறு தீர்ப்பளித்துள்ளார்.