மும்பையில் இடிந்து விழுந்த விளம்பர பலகையை நிறுவிய தொழிலதிபர் கைது
மும்பை காட்கோபரில் இடிந்து விழுந்த விளம்பர பலகையை நிறுவிய தொழிலதிபர் பாவேஷ் பிண்டே இன்று ராஜஸ்தானின் உதய்பூரில் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் புயலின் போது பவேஷ் பிண்டே நிறுவிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 74 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியான பாவேஷ் பிண்டே, சம்பவம் நடந்ததில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இவர் மீது பலாத்காரம் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
பவேஷ் பிண்டே நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும்போது எந்த டெண்டர் நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்று பாஜக தலைவர் கிரித் சோமையா குற்றச்சம் சுமத்தியுள்ளார்.
“சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத்துடன் நெருக்கமாக இருந்ததால் தான் அவருக்கு அனுமதி கிடைத்தது” என்று பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.