பிரித்தானியாவில் நீரில் ஏற்பட்ட தொற்று : அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!
பிரித்தானியாவில் நீரில் ஏற்பட்ட தொற்றினால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏறக்குறைய ஒரு மாதம் இந்த தொற்றானால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிக்ஸ்ஹாமின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் நீரை சூடாக்கி பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 22 பேர் கிரிப்டோஸ்போரிடியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் நிபுணரான பேராசிரியர் பால் ஹண்டர், ஒரு மாதத்திற்கு நோய்வாய்ப்பட்டிருப்பது அசாதாரணமானது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
டெவோனில் உள்ள நீர் விநியோகத்தில் ஒட்டுண்ணியின் “சிறிய தடயங்கள்” காணப்பட்டதாக நீர் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 31 times, 1 visits today)





