ஜெர்மனியில்அமுலுக்கு வரும் சட்டம் – திருமண வயது தொடர்பில் முக்கிய தீர்மானம்
ஜெர்மனியில் திருமண வயது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு 2016 ஆம் ஆண்டு அளவில் சிரியாவில் இருந்து பல லட்சக்கணக்கான அகதிகள் ஜெர்மன் நாட்டுக்கு வந்துள்ளார்கள்.
அவர்கள் அவர்களது இஸ்லாம் கலாசாரத்துக்கு அடிப்படையில் 16 வயதில் அவர்களது சொந்த நாட்டில் திருமணத்தை முடித்து இருந்துள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனியில் 16 வயதில் திருமணம் முடித்தது என்பது சட்ட விரோதமான செயற்பாடு ஆகும்.
இதன் காரணத்தினால் ஜெர்மனி பராளுமன்றத்தில் திருமணம் வயது தொடர்பில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
16 வயதில் திருமணம் செய்யப்பட்டிருப்பின் இந்த திருமணமானது சட்டவிரோதமானது என்று குறித்த சட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது 16 வயதில் தமது நாட்டில் திருமணம் முடித்து இருந்தால் ஜெர்மன் நாட்டுக்கு குழந்தையுடன் வரும் சந்தர்ப்பத்தில் குழந்தையின் பராமரிப்பு எவ்வாறு அமையும் என்ற நிலையில்
புதிய தீர்வை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு சிறுவர் திருமணங்கள் ஜெர்மன் நாட்டின் விழுமியங்களுக்கு எதிரானது என ஜெர்மனியின் நீதி அமைச்சர் மார்கோ புஸ் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.