தென்னாப்பிரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மரணம்
தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வீட்டினுள் புகுந்து நடத்திய தாக்குதலில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் நாட்டின் தென்கிழக்கே உள்ள இம்பாலி பகுதியில் (Imbali) இன்று (21 ஏப்ரல்) நடந்தது.
இந்த தாக்குதலில் 7 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. அங்கு இத்தகையக் குற்றச்செயல்கள் நடப்பது வழக்கமான விடயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





