டிக்டாக் பிரபலம் பாட்ரிசியா ரைட் காலமானார்
டிக்டாக் பிரபலம் பாட்ரிசியா ரைட் தனது 30 வயதில் உயிரிழந்துள்ளார்.
பாட்ரிசியா ரைட், செல்வாக்கு பெற்றவர், தனது முழு தோல் புற்றுநோய் பயணத்தையும் ஆவணப்படுத்தினார், அவர் தனது 30ஆவது வயதில் இறந்தார்.
அவரின் குடும்பம் ஒரு அறிக்கையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது.
பாட்ரிசியா எங்களை விட்டு பிரிந்துவிட்டார். இந்த கடினமான காலங்களில் அவரது தாயும் அவரது உறவினர்களும் மரியாதை கேட்கிறார்கள், என்று அவரது குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த நேரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆதரவையும் அன்பையும் வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
டிக்டாக் வீடியோக்களுக்குப் பிரபலமான பாட்ரிசியா ரைட், ஃபேஷன் மற்றும் அழகு தொடர்பான உள்ளடக்கத்தை தனது டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி பதிவிட்டு வந்தார், அவர் 3,40,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.
அவர் ஸ்பானிஷ் ரியாலிட்டி டிவி டேட்டிங் நிகழ்ச்சியான முஜெரெஸ் ஒய் ஹோம்ப்ரெஸ் ஒய் வைசெவர்சாவிலும் தோன்றினார். ஏப்ரல் 5 ஆம் திகதி மருத்துவமனை படுக்கையில் இருந்து தனது கடைசி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
பிஸியான வாரம், நான் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெறப் போகிறேன், ஆனால் இறுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றேன், என்று அவர் விளக்கினார்.
அப்போதிலிருந்து, நேற்று வரை உடம்பு வலியுடன் வாந்தி. குளியலறையை விட்டு நகர முடியாமல் பயங்கரமாக உணர்ந்தேன்.
இன்றைக்கு கொஞ்சம் வலுவா இருக்கு. நேற்றிலிருந்து வாந்தி எடுக்காமல், வெள்ளியிலிருந்து சாப்பிட ஆரம்பித்து விட்டேன். கொஞ்சம் கொஞ்சமா போகலாம், என்று குறிப்பிட்டிருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவர் தனது சமூக கணக்குகளைப் பயன்படுத்தி தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும், தனது இறுதி மாதங்களை ஆவணப்படுத்தவும் பயன்படுத்தினார்.
அவரது இழப்பால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.