யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று (13) விநியோகிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர். எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள்.
வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவை கடத்தும் வகையில் விநியோகிக்கப்பட்டது.
(Visited 34 times, 1 visits today)