கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற நான் உதவி செய்தேன் – மொஹமட் நஷீட்
பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவிக்கு தாற்காலிக தங்குமிடங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி உரிய காலத்தில் தங்குவதற்கு மாலைதீவில் உள்ள உல்லாச விடுதியில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஜூலை 13, 2022 அன்று நாட்டை விட்டு வெளியேறிய அப்போதைய ஜனாதிபதி, முதலில் மாலத்தீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சென்றார்.
நாட்டில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான பொதுமக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டதாகக் கலந்துரையாடலில் தெரிவித்த மொஹமட் நஷீட், நிலைமையை அமைதிப்படுத்த தன்னால் செய்யக்கூடிய சிறந்த காரியம், அவர் வெளியேறுவதற்கு வசதி செய்வதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.