நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா!

நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன் பிரசண்டா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறியுள்ளார்.
யாதவ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் இன்று காலையில் வழங்கியதுடன் அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை மந்திரி தீபக் கார்கியும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
ஜே.எஸ்.பி.-நேபாள் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் இருந்தனர். கட்சி உடைந்தபின் எம்.பி.க்கள் பலம் 5 ஆக குறைந்தது. அசோக் ராய் மற்றும் 6 எம்.பி.க்கள் மற்றும் 30 மத்தியக் குழு உறுப்பினர்கள் புதிய கட்சியில் உள்ளனர்.
உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசண்டா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
(Visited 33 times, 1 visits today)