பாரிஸில் சூட்கேசில் இனங்காணப்பட்ட சடலம் தொடர்பில் ஒருவர் கைது!
பாரிஸில் உள்ள செய்ன் நதியில் சூட்கேசில் நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலத்தின் அடியில் ஒரு சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் அடைக்கப்பட்டிருப்பதை தீயணைப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தற்போது 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார் படுத்தல்கள் மும்முறமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறான ஒரு கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மக்கள் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





