தேர்தல் விதியை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியாலில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது நண்பரும், YSRCP எம்எல்ஏவுமான சில்பா ரவியின் வீட்டிற்குச் சென்றதற்காக காவல்துறை குற்றம் சாட்டியது.
நடிகரை காண ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் திரண்டதால் பதற்றம் நிலவியது.
‘புஷ்பா’ புகழ் நடிகர், தொகுதி தேர்தல் அதிகாரியின் முன் அனுமதியின்றி எம்எல்ஏ வீட்டிற்கு சென்றதால், அவர் மீதும், ஒய்எஸ்ஆர்சிபி வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிரசாரத்தின் கடைசி நாளில் அல்லு அர்ஜுன் தனது ஆதரவை தெரிவிக்க எம்எல்ஏவின் வீட்டிற்கு சென்றார். அவரது வருகையைப் பற்றி அறிந்ததும், அவரது ரசிகர்கள் ஏராளமானோர் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தை பார்க்க வீட்டின் வெளியே திரண்டனர்.
நடிகர் அவர் தனது மனைவி சினேகா ரெட்டி, சில்பா ரவி மற்றும் எம்.எல்.ஏ-வின் குடும்ப உறுப்பினர்களுடன் பால்கனியில் தோன்றி, ‘புஷ்பா, புஷ்பா’ என்று கோஷமிட்ட பெரும் கூட்டத்தை சந்தித்தார்.
உள்ளூர் டூ டவுன் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 (பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.