மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட அமெரிக்கர் உயிரிழப்பு !
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் பொது மருத்துவமனையில், 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு சிறுநீரகம் மிக மோசமாக பாதிப்படைந்ந்தால், உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
ஒரு உயிரினத்தின் இறுப்புகள் அல்லது திசுக்களை வேறொறு உயிரினத்திற்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தும் வேறு இன உறுப்பு முறையில் இந்த சாதனை ஒரு மைக்கல்லாக பார்க்கப்பட்டது.
தற்போது சிகிச்சை முடிந்து 2 மாதங்களில் ஸ்லேமேன் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து, ஸ்லேமேனின் இறப்பிற்கும் அறுவை சிகிச்சைக்கும் தொடர்பில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
” ஸ்லேமேனின் இறப்பு எங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தயுள்ளது. ஆனால் அவர் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முன்வரும் பலரை ஊக்கப்படுத்துவார் என்பது ஆறுதலாக உள்ளது. அவரை பராமரித்த மருத்துவர் குழுவுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். அவர்களின் அறுவை சிகிச்சையால் தான் நாங்கள் மேலும் 2 மாதங்கள் அவருடன் வாழ்ந்தோம்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பன்றியின் சிறுநீரக்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணுக்களை நீக்கி, மனித உடலுக்கு இணக்கமாக செயல்படுவதற்கு மனித மரபணுக்களை சேர்த்து இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்கு நோய்தொற்று அபாயத்தை அகற்ற நன்கொட்டையாகப் பெறப்பட்ட பன்றியின் உடலிலிருந்து ‘மோர்கைன் எண்டோஜீனஸ் ரெட்ரோவைரஸை’சிகிச்சைக்கு முன்னர் ஆராச்சியாளர்கள் அகற்றியுள்ளனர்.