இந்தியா: விமான நிலையம் உட்பட இரண்டு டெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் தொடர்ந்து விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள 200 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய தலைநகரில் உள்ள இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக புகாரளித்துள்ளன.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து முதன்முதலில் புராரி மருத்துவமனை பிற்பகல் 3.15 மணிக்கு தகவல் தெரிவித்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாவது அழைப்பு மாலை 4.26 மணியளவில் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மாலை 6.15 மணியளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புப் படைக்கு அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது
சில நாள்களுக்கு முன்பாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையத்துக்கு இத்தகைய மிரட்டல் வந்துள்ளதால் நாட்டின் தலைநகரில் பரபரப்பு நிலவுகிறது.