இலங்கை: போலி கடவுச்சீட்டை தயாரித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் BIA இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47 மற்றும் 37 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 23 times, 1 visits today)