ஐரோப்பா

இங்கிலாந்தில் உள்ள ஜிம்மை அதிரடியாக முற்றுகையிட்ட பொலிஸார் : பயிற்சியாளர் போர்வையில் இருந்த பயங்கரவாதிகள்!

கிரேட்டர் மான்செஸ்டரின் ஹிண்ட்லியில் உள்ள பிளாட் லேனில் உள்ள தி வேர்ஹவுஸ் ஜிம்மிற்குள் பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு மூன்றுபேரை கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் பயங்கரவாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் ஜிம்மிற்குள் நுழைந்த போது சுமார் 250 பேர் அங்கு உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35, 36 மற்றும் 51 வயதுடையவர்கள் என்றும், ஜிம்மின் பயிற்சியாளர் போர்வையில் அங்கு அவர்கள்  பணியாற்றி வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கையை தொடர்ந்து போல்டன், கிரேட் லீவர், ஆப்ராம் மற்றும் ஹிண்ட்லி ஆகிய இடங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் போலிஸ் பிரச்சன்னம் குறித்த பகுதியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!