இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகத்தை சீனா ஹேக் செய்ததா? கிராண்ட் ஷாப்ஸ் கருத்து!
சீனாவால் ஹேக் செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊதிய முறையை இயக்கும் ஒப்பந்ததாரரின் பெயரை பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
SSCL (Shared Services Connected Ltd) ஒப்பந்தக்காரர் என்றும், சைபர் தாக்குதலைத் தொடர்ந்து அரசாங்கம் முழுவதும் அவர்களின் பணிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஷாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட மற்றும் தீங்கிழைக்கும் அவதூறுகள் என்று சீனா கூறியுள்ளது.
இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்கள் , ராயல் நேவி மற்றும் RAF வீரர்கள் மற்றும் சில வீரர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் வங்கி விவரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)