ஐரோப்பா

இங்கிலாந்தில் இலவச குழந்தை பராமரிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

இங்கிலாந்தில் உள்ள ஒன்பது மாத வயதுடைய குழந்தைகளின் தகுதியுள்ள பணிபுரியும் பெற்றோர்கள் வாரத்திற்கு 15 மணிநேரம் வரை அரசு நிதியுதவியுடன் கூடிய குழந்தை பராமரிப்புக்கான அணுகலை வரும் ஞாயிற்றுக்கிழமை (12.05) முதல் பதிவுசெய்ய முடியும்.

03 -04 வயது குழந்தைகள்

03 -04 வயது இடைப்பட்ட குழந்தையை வைத்திருப்பவர்கள் பராமரிப்பு தேவைக்காக விண்ணப்பிக்க முடியும். ஒரு வாரத்திற்கு 15 மணிநேர இலவச குழந்தைப் பராமரிப்பை நீங்கள் கோர முடியும்.

பெற்றோர்கள் இருவரும் 30 மணிநேரம் வேலை செய்யும்போதோ அல்லது வருடத்திற்கு ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் ஊதியமாக பெறும்போதே இந்த சலுகையை பெற்றுக்கொள்ள முடியும்.

02 வயது குழந்தை

முன்னதாக, சில சலுகைகளைப் பெற்ற பெற்றோர்கள் மட்டுமே 15 மணிநேர இலவச குழந்தைப் பராமரிப்புக்கு தகுதியுடையவர்கள்.

பணிபுரியும் பெற்றோர் ஆண்டுக்கு £8,670 க்கும் அதிகமாகவும், £100,000 க்கும் குறைவாகவும் சம்பாதித்தால் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

ஒன்பது மாத குழந்தை

15 மணிநேரச் சலுகை ஒன்பது மாத வயதுடைய குழந்தைகளின் பணிபுரியும் பெற்றோருக்கும் நீட்டிக்கப்படும்.

மே 12 முதல், ஆகஸ்ட் 31 அன்று குறைந்தபட்சம் ஒன்பது மாதங்கள் இருக்கும் குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் 15 மணிநேர பராமரிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இங்கிலாந்தில் குழந்தை பராமரிப்பு சலுகைக்கான இறுதி மாற்றம் செப்டம்பர் 2025 இல் வெளியிடப்படும், ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் தகுதியுள்ள பணிபுரியும் பெற்றோர்கள் வாரத்திற்கு 30 மணிநேர இலவச குழந்தைப் பராமரிப்பைப் பெற முடியும்.

இந்த தகவல்கள் இங்கிலாந்தில் வசிக்கும் பெற்றோர்களுக்கு மாத்திரமே பொருந்தும்.

(Visited 23 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!