புதிய நிலையத்தை திறந்து வைக்கும் லிட்ரோ
கடுவெல – மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பும் முனையம் நாளை (08) திறந்து வைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (07) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய லிட்ரோ எரிவாயு நிரப்பும் முனையம் நாளொன்றுக்கு 60,000 சிலிண்டர்களை வழங்கும் திறன் கொண்டது என்று அவர் கூறினார்.





