மார்வின் சில்வா பிணையில் விடுதலை
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செய்தி பணிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தி திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் மாநகர சபை உறுப்பினர் லால் பீரிஸை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அவரின் வெளிநாட்டு பயணத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா உட்பட ஒரு கும்பலுடன் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் நுழைந்து, செய்தி இயக்குனரை தாக்கப் போவதாக மிரட்டியதாக, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அப்போது முன்னாள் அமைச்சராக இருந்த மார்வின் சில்வாவுக்கு ஐந்து இலட்சம் ரூபா பிணை வழங்கப்பட்டுள்ளது.