இலங்கை – மோசடி விவகாரம்… முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடத்தி கொலை!
தெம்புவன பேகமுவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தடிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 8 இலட்சம் ரூபாவை இரண்டு பேரிடம் மோசடி செய்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மோசடியில் சிக்கியதாக கூறப்படும் இருவர் வேறு ஒருவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது
(Visited 19 times, 1 visits today)





