குளியாப்பிட்டியவில் இளைஞர் காணாமல் போன சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு பிணை
குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று (06) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
சந்தேக நபரை தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க குளியாபிட்டிய நீதவான் ரந்திகா லக்மால் உத்தரவிட்டுள்ளார்.
சுஜித் பெர்னாண்டோ அல்லது “சிகிட்டி” என்ற நபரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய கபலாவ பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுசிதா ஜயவன்ச என்ற நபர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் தனது காதலியின் தந்தையின் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார், அங்கு அவர் இரண்டு கொத்தனார்களுடன் சேர்ந்து காதலியின் தந்தையால் தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி குறித்த இளைஞனை பிரதேசத்தில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக கைது செய்யப்பட்ட கொத்தனார்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேகநபரும் அவரது மனைவியும், காணாமல் போன இளைஞனின் காதலியான அவரது மகள் உள்ளிட்டவர்கள் பிரதேசத்தை விட்டு தலைமறைவாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.