சாதாரண தரப் பரீட்சை – ஆசி வேண்டி கோவிலுக்கு சென்ற மாணவர் உயிரிழப்பு

பலாங்கொடை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றிற்கு ஆசி வேண்டி வழிபடச் பெறச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஹரநாத் ரஞ்சித் குமார என்ற பாடசாலை மாணவன் இன்று காலை பலாங்கொட மரதென்ன பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
மாணவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 19 times, 1 visits today)