நியூசிலாந்தும் சீனாவுக்கு சிவப்பு எச்சரிக்கை
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாடுகள் தொடர்பில் அப்பிராந்திய நாடுகள் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நியூசிலாந்தும் அதில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்படி, பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் விரல் நீட்டல் குறித்து தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கும் முன்னேற்றங்களை தனது நாடு காண விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
உக்ரேனிய போர் மோதல்களைத் தடுப்பதில் சீனா சிறந்த பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
(Visited 3 times, 1 visits today)