ஆசியாவை உலுக்கும் கடும் வெப்பமான காலநிலை – கல்வி நடவடிக்கையை பாதிக்கும் அபாயம்
ஆசியாவை உலுக்கி வரும் கடுமையான வெப்பமான காலநிலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்ற கவலையை அதிகரித்துள்ளது.
உலகளவில் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே இருக்கும் கற்றல் இடைவெளியை இந்நிலை அதிகரிக்கும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிலிப்பீன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் சில பகுதிகள் உட்படப் பல நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலை தொடர்ந்தால் கல்வி முன்னேற்றம் மெதுவடையலாம். வேறு சில இடங்களில் பாடசாலைகள் வழக்கம்போல் இயங்கினாலும் சூடான வகுப்பறையில் பாடத்தில் கவனம் செலுத்த மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.
அதிகமான வெப்பநிலை காரணமாக மூளையின் செயல்பாடுகள் தாமதமாகலாம் என்பது நிபுணர்களின் கருத்தாகியுள்ளது.
தகவலைத் தக்கவைக்கும் திறன் குறைவதோடு உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.