ஜெர்மனியில் குழந்தைகளுக்கான உதவித் தொகை தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் உதவித் தொகை உயர்வடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் தற்போதைய நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் எதிர்வரும் ஆண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது 2023 ஆம் ஆண்டு ஒரு குழந்தைக்கு தலா 250 யூரோவாக உயர்த்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்பொழுது பல தரப்பினரிடம் இருந்து இந்த நிதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் நிதி அமைச்சர் லின் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தான் 2025 ஆம் ஆண்டு கிண்டர்கெல்ட் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்காக தொகையை உயர்த்த உள்ளதாகவும், இந்நிலையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம், சாதாரணமாக ஒருவர் வாழ்வதற்கு எவ்வளவு பணம் வழங்க வேண்டும் என்ற நிபுணர் குழுவின் அறிக்கையின் பின் எவ்வளவு தொகை இந்த கிண்டர்கெல்ட்டாக உயர்த்தப்படும் என்றும் அவர் தீர்மானிப்பார் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் குழந்தைகளுக்கான அடிப்படை கொடுப்பனவு என்ற ரீதியில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.