செய்தி

இன்றைய போட்டியில் CSK அணியில் இடம்பெறவுள்ள முக்கிய மாற்றங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என்றாலே போட்டியிடுவது 10 அணிகளாக இருந்தாலும் சரி, 8 அணிகளாக இருந்தாலும் சரி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் அணிகளாக இருக்கும். இரு அணிகளும் இதுவரை தலா 5 கோப்பைகளை வென்றுள்ளது.

அப்படியிருக்க நடப்பு 17வது ஐபிஎல் தொடரில் (IPL 2024) மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி இருக்கிறது. 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. இன்னும் மூன்று லீக் போட்டிகளே பாக்கியிருக்கிறது. 2020ஆம் ஆண்டு பலமான அணியாக இருந்து கோப்பையை கைப்பற்றிய பின் அந்த அணி கடந்த 4 ஆண்டுகளிலும் தொடர் சறுக்கலை சந்தித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் இந்த முறை பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 5 தோல்வி. இன்னும் ஒரு தோல்வி போதும் அந்த அணியை தொடரில் இருந்து வெளியேற்றுவதற்கு… எனவே, ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டி அழைந்து வருகின்றனர். பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஆர்சிபி என சிஎஸ்கேவுக்கு அடுத்த நான்கு போட்டிகள் இந்த அணிகளுடன்தான் உள்ளது.

இதில் பஞ்சாப் அணியை ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் சிஎஸ்கே நாளை மாலை போட்டியில் சந்திக்கிறது. இந்த தொடரில் முதல்முறையாக சிஎஸ்கே மாலை போட்டியில் விளையாடுகிறது. இதுவும் இந்த போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 29 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி சிஎஸ்கே 15 போட்டிகளிலும், பஞ்சாப் 14 போட்டிகளிலும் வென்றுள்ளது. இருப்பினும் இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் பஞ்சாப் அணிதான் வென்றிருக்கிறது.

கடந்த மே 1ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியிலும் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்க நாளைய போட்டியை வெல்ல சிஎஸ்கே அணி என்ன மாற்றங்களை செய்யலாம் (Chennai Super Kings Changes) என்பது குறித்து இங்கு காண்போம். முதலில், முஸ்தபிசுர் ரஹ்மான் நாடு திரும்பிவிட்டார். எனவே, ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சிஎஸ்கேவுக்கு தேவை. அந்த இடத்தில் முகேஷ் சௌத்ரி வருவார் எனலாம்.

மறுபுறம், பதிரானாவும் கிலீசன் வேகப்பந்துவீச்சை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். பதிரானா இன்று தரம்சாலா வந்துவிட்டார் என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியாகும். தொடர்ந்து, தீபக் சஹார் காயத்தால் அவதிப்படுவதால் அவரும் இனி விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது, எனினும் அது உறுதியாகவில்லை. அதேபோல், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த துஷார் தேஷ்பாண்டேவின் உடற்தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. எனவே, சிஎஸ்கே அணி பந்துவீச்சை பலப்படுத்த நினைக்கும்.

எனவே, ரிஸ்விக்கு பதில் மேலும் ஒரு இந்திய பந்துவீச்சாளர் சிஎஸ்கேவில் களமிறங்கலாம். ருதுராஜ் – ரஹானே ஓப்பனிங், மிட்செல், தூபே, மொயின் அலி, ஜடேஜா, தோனி என பேட்டிங் ஆர்டர் இருக்கும். ஷர்துல் தாக்கூர், முகேஷ் சௌத்ரி, ரிச்சர்ட் கிலீசன், பதிரானா ஆகியோர் என பிளேயிங் லெவன் அமைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. முகேஷ் சௌத்ரி நலம் பெற்றுவிட்டால் ஷர்துல் தாக்கூர் பதில் அவரை சேர்க்கலாம்.

மொயின் அலிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுமா தீக்ஷனாவை மீண்டும் ஒருமுறை முயற்சிப்பார்களா என தெரியவில்லை. மொயின் அலியை தூக்கினால் ரிஸ்வி அந்த இடத்திற்கு வரலாம். இம்பாக்ட் பிளேயர் விதியில் சர்ஃப்ரைஸாக கூட வேறு யாரும் களமிறங்கலாம். எனவே, 2010ஆம் ஆண்டு பஞ்சாப் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே எப்படி தகுதிபெற்றதோ, அதனை 14 ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே மீண்டும் செய்யுமா, தோனியின் அந்த மேஜிக் மீண்டும் நிகழுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி