செய்தி தமிழ்நாடு

திருநெல்வேலியில் காணாமல் போன காங்கிரஸ் தலைவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், அவரை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ஜெயகுமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடல் பாதி எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஜெயகுமார் தனசிங் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இப்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!