கஜகஸ்தான் – மனைவியை அடித்தே கொலை செய்த முன்னாள் அமைச்சர் ; நீதிமன்றில் ஒளிபரப்பான ஆதார வீடியோ!
கஜகஸ்தானில் முன்னாள் அமைச்சர், தனது மனைவியை உணவகத்தில் வைத்து 8 மணி நேரமாக தாக்தி கொலை செய்த CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்தவர் குவாண்டிக் பிஷிம்பாயேவ்(44). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அல்மாட்டியில் உள்ள உணவகத்தில் இவரது மனைவி சுல்தானட் நுகெனனோவா(31) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்குத் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருவாரமாக , தனக்கு இந்த மரணம் குறித்து எதுவும் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் பிஷிம்பாயேவ் பொலிஸாரிடம் கூறினார். அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்காததால், அவருக்கு எதிராக ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், தனது மனைவியை அடித்துக் கொலை செய்ததை குவாண்டிக் பிஷிம்பாயேவ் பின்பு ஒத்துக் கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், சுல்தானட் மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று கூறப்பட்டது. அத்துடன் தாக்குதலின் விளைவாக, அவரது நாசி எலும்புகளில் ஒன்று உடைந்தது மற்றும் அவரது முகம், தலை, கைகள் மற்றும் கைகளில் பல காயங்கள் இருந்ததும் கண்டுடிபிடிக்கப்பட்டது. மருத்துவர்களின் கூற்றுப்படி, சுல்தானத் நுகெனோவா தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. தனது சகோதரி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை என்று சுல்தானத் சகோதரி, கஜகஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது பிஷிம்பாயேவ் தனது மனைவி சுல்தானட்டை தாக்கி இழுத்துச் செல்லும் CCTV காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.அந்த வீடியோவில், பிஷிம்பாயேவ் தனது மனைவியை உணவகத்தில் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றதும் பதிவாகி இருந்தது.