நிலவின் இருண்ட பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய சீனா!
கண்ணுக்கு தெரியாத நிலவின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் நிலவின் தொலைதூர பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா புதிய பணியை தொடங்கியுள்ளது.
லாங் மார்ச்-5 ஒய்8 ராக்கெட் ஆளில்லா சாங் யி சிக்ஸை சுமந்து கொண்டு வெங்சான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
53 நாள் பணியானது சந்திரனின் தொலைதூர பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோ மாதிரிகளை பகுப்பாய்வுக்காக பூமிக்கு கொண்டு வரும்.
சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சீனாவின் Chang’e 7 மிஷன் நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதையும், Chang’e 8 திட்டத்தின் கீழ் ஒரு சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளையும் ஆராயும்.
(Visited 7 times, 1 visits today)