25 வயது K-Pop நட்சத்திரம் Moon Bin திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தென்கொரியாவில் பிரபல K-Pop நட்சத்திரம் மூன் பின் (Moon Bin) மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணத்தை இன்று இசைத் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டில் அவர் உயிரிழந்து காணப்பட்டதாக அவரது நிர்வாகி கூறினார்.
அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அது பிரேதப் பரிசோதனையில் தெரியவரும் என்று காவல்துறை சொன்னது.
எதிர்பாராமல் நம்மை விட்டுப் பிரிந்து வானில் நட்சத்திரங்களுடன் கலந்துவிட்டார்,” என்று அவரது இசைத் தயாரிப்பு நிறுவனம் அஞ்சலிக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
ஊகங்களின் அடிப்படையில் தவறான கருத்துக்களைப் பரப்பவேண்டாம் என்றும் நிறுவனம் கேட்டுக்கொண்டது.
Astro Boy Band-இல் இணைவதற்குமுன் மூன் பின் ஒரு நடிகராகவும் விளம்பர நடிகராகவும் இருந்தார்.
இதற்குமுன் மேலும் சில K-Pop நட்சத்திரங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இளையர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்று தென்கொரியா என்பது குறிப்பிடத்தக்கது.