அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிக்கு எதிராக வழக்கு தொடரும் இந்திய தம்பதியினர்!
இந்தியாவில் கொவிஷீல்ட் தடுப்பூசியால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் தற்போது அந்த தடுப்பூசியை உருவாக்கிய பிரித்தானிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனக்கா தடுப்பூசி இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கொவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி கொவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் பல மக்கள் செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட காருண்யா என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருடைய மரணத்திற்கு நீதிக் கோரி அவருடைய பெற்றோர் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
AstraZeneca தடுப்பூசிக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.