பிரேசிலில் கனமழையால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : 60 பேர் மாயம்!
பிரேசிலின் தெற்கு ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 60 பேர் மாயமாகியுள்ளதாக மாநிலத்தின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஜென்சி அதன் முந்தைய அறிக்கையில், நண்பகலில், 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் 21 பேர் காணவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா நேற்று (02.05) மாநிலத்திற்குச் சென்று உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
“இந்த மழையால் பாதிக்கப்படும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கள் அரசாங்கத்திற்கு எட்டக்கூடிய அனைத்தும் செய்யப்படும்” என்று அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)