காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 30-40 பில்லியன் டாலர்கள் செலவாகும் : ஐ.நா
போரினால் சிதைந்த காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 30 பில்லியன் டாலர் முதல் 40 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரை கண்டிராத அளவில் ஒரு முயற்சி தேவைப்படும் என்றும் ஒரு ஐநா நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் புனரமைப்புக்கான ஆரம்ப மதிப்பீடுகள்,காஸா பகுதி $30 பில்லியனைத் தாண்டி $40 பில்லியனை எட்டக்கூடும்” என்று UN உதவிச் செயலர் அப்துல்லா அல்-தர்தாரி கூறினார்.
“அழிவின் அளவு மிகப்பெரியது மற்றும் முன்னோடியில்லாதது இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய சமூகம் கையாளாத ஒரு பணி” என்று ஜோர்டானிய தலைநகர் அம்மானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தர்தாரி கூறினார்.
காசாவின் புனரமைப்பு சாதாரண செயல்முறையின் மூலம் மேற்கொள்ளப்படுமானால், அதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம் என்றும்தெரிவித்தார்.
“எனவே, மக்களை கண்ணியமான வீடுகளில் குடியமர்த்தவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சுகாதாரம் மற்றும் கல்வியின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதற்கும் நாம் விரைவாகச் செயல்படுவது முக்கியம்”.
குண்டுவீச்சு மற்றும் வெடிப்புகளின் மொத்த இடிபாடுகள் 37 மில்லியன் டன்கள் என அவர் மதிப்பிட்டார்.