ஆப்பிரிக்கா

காங்கோவில் mpox தொற்றுடன் போராடும் மக்கள் : வைத்தியர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

காங்கோவில் மக்கள் mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல்,  4,500 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான mpox வழக்குகள் பதிவாகியுள்ளதுடன்,  கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

mpox இன் சமீபத்திய மரபணு மாற்றம் மக்களுக்கு வேகமாக பரவக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

பெரும்பாலான மக்களுக்கு உடலுறவு மூலமாக குறித்த தொற்று பரவியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

அத்துடன் ஆரம்பத்தில் பரவிய தொற்றானது மார்பு மற்றும் கைகளில் பரவிய நிலையில் தற்போது அந்தரங்க பகுதிகளில் அதிகளவில் பரவுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே நோயாளிகள் தாங்களே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டால் மாத்திரமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!