இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 9.1 வீதம் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அத்துடன், யூரோ, ஸ்ரேலிங் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் இந்திய ரூபாவுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதேநேரம், மார்ச் மாத இறுதிக்குள், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)