அப்பாவி இலங்கையர் மீது தாக்குதல்: பிரித்தானிய காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நிரபராதியை குற்றவாளி என்று தவறாகக் கருதி அவரைத் தாக்கி கைது செய்த லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு அவருக்கு 12 வார பணி இடைநீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்களும் மார்ஷுக்கு 150 மணிநேர ஊதியம் இல்லாத வேலை மற்றும் அவர் இழப்பீடாக £1,500 செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
2022 இல் கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்டில் ஒரு நபர் மிரட்டல் விடுத்து ஒரு கடையை சேதப்படுத்தியதாக அவர் முறையிட்டுள்ளார்.
எனினும் குற்றவாளியை கைது செய்யாத ஜொனாதன் மார்ஸ் என்ற பொலிஸ் அதிகாரி 999 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்த ரசிகே அத்தநாயக்கவை தாக்கி கைது செய்துள்ளார்.
அத்துடன் அவர் அத்தநாயக்கவை தரையில் இழுத்து சென்று தலையின் பின்புறத்தில் தாக்கியதும் காணொளி ஒன்றில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.