இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய ருவாங் எரிமலை : பள்ளிகள், விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன!
இந்தோனேசியாவின் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்துள்ள நிலையில், அதிக வெப்பமான மேகங்களை உமிழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், பாடசாலைகள், விமான நிலையங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.
ருவாங் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்துவிடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ருவாங்கும் ஒன்றாகும். இந்தோனேசியா பசுபிக் நெருப்பு வளையத்திற்கு அண்மையில் அமைந்திருப்பதால் எரிமலை வெடிப்பு பொதுவான ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)