இலங்கையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு!
தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய, சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று முற்பகல் கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தபோது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றியிருந்தனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும். தொடர் குடியிருப்புகளை கிராமங்களாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனது ஆட்சியின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் காலத்திலும், பொருளாதார நெருக்கடியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களே அதிக துயரத்தை அனுபவித்தனர். அவர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கடும் துயரத்தை அனுபவித்த போதிலும், தேயிலை உற்பத்தி ஊடாக எமக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி என்ற ரீதியில் நன்றி கூறுகின்றேன் என்றார்.