பிரேசிலை உலுக்கிய மழை – 5 பேர் மரணம் – 18 பேர் மாயம்
பிரேசிலின் தெற்கே ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனத்த மழையில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 18 பேர் காணாமல் போயுள்ளனர்.
மாநிலத்தில் நிலவும் மோசமான வானிலையால் சுமார் 77 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும்படி மாநில ஆளுநரிடம் தாம் பேசியிருப்பதாக அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறியிருக்கிறார்.
எதிர்வரும் நாள்களில் இன்னும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிக்கப்பட்டு வரும் ஆறுகளில் நீரின் அளவு எச்சரிக்கை அளவைத் தாண்டியிருக்கிறது.
இதற்குமுன்னர் கடந்த மார்ச் மாத இறுதியில் பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த மழையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)