லண்டனில் பயங்கரம்! வாளைக் கொண்டு பொதுமக்களை தாக்கிய நபர்: 13 வயது சிறுவன் பலி

கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட் பகுதியில் இன்று கையில் வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்த நபர், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
அந்த நபரை போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தாக்குதலில் காயமடைந்த 13 வயது சிறுவன் மருத்துவமனைக்குச் சென்றபோது உயிரிழந்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்: மூன்று பொதுமக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அடங்குவர்.
இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 22 times, 1 visits today)