அதிகரித்து வரும் வெப்பநிலை : ஆசியா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அதிகரித்து வரும் வெப்பநிலை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தொடர்ச்சியான சுகாதார எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது.
பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தோனேசியா போன்ற மற்ற நாடுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“உயர் நீதிமன்ற நீதிபதி கம்ருல் காதர் மற்றும் நீதிபதி கிசிர் ஹயாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, வெப்பச்சலனம் காரணமாக அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மதரசாக்களை மூட தானாக முன்வந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் பள்ளிகளை மூடியுள்ளதுடன், அதன் பவர் கிரிட்டில் அதிக சுமை இருப்பதாக எச்சரித்துள்ளது. அத்துடன் வெப்பநிலை அடுத்த மூன்று நாட்களில் 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.